பல கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிலுள்ள 17 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்றும் (03) வைத்தியசாலைகளில் மீண்டும் பணிப் புறக்கணிப்பு போராட்ட தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
சுகாதார அமைச்சருடன் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் தமக்கு திருப்தியளிக்காத காரணத்தினால் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன