crossorigin="anonymous">
உள்நாடுபொது

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை அமைச்சுப் பதவியை வகிக்கப்போவதில்லை – விமல் வீரவன்ச

தற்போதைய ஜனாதிபதி பதவியில் இருக்கும் வரை தாம் எதிர்காலத்தில் எந்தவொரு அமைச்சுப் பதவியையும் வகிக்கப்போவதில்லை என அமைச்சு பதவி விலக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சி உறுப்பினர்களின் ஏற்பாட்டில் இன்று  (04) நடாத்தப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அமைச்சர்களாக இருந்த உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோருக்கு நீதி கிடைக்கும் வரை தான் அமைச்சரவை கடமைகளில் இருந்து விலகிக் கொள்வதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தான் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்யப்போவதில்லை எனவும், அமைச்சு பதவி தொடர்பான அனைத்து நடவடிக்கைகளில் இருந்தும் விலகிக் கொள்வதோடு, அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லப்போவதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 1 = 1

Back to top button
error: