இலங்கை முழுவதும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரச மற்றும் தனியார் பாடசாலைகள் மீண்டும் இன்று (07) திங்கள் கிழமை ஆரம்பமாகின்றன
கல்வி அமைச்சினால் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளை 2021 கல்வி ஆண்டுக்காக மீண்டும் இன்று திறப்பது தொடர்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
20 மாணவர்கள் கொண்ட வகுப்புகள் எல்லா நாட்களும் இடம்பெறும்., 21 – 40 மாணவர்கள் கொண்ட வகுப்பிலுள்ள மாணவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு வாரம் விட்டு வாரம் வகுப்புகள் இடம்பெறும்.
40 இற்கும் அதிகமான மாணவர்கள் கொண்ட வகுப்புகளிலுள்ள மாணவர்களை மூன்று சம குழுக்களாகப் பிரித்து வகுப்புகள் இடம்பெறும்.
2021 க.பொ.த (உயர்தர) பரீட்சைகளுக்காக பெப்ரவரி 07 – மார்ச் 07 வரை அனைத்துப் பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.