சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், அதற்கு ஏற்றவாறு, எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும் என மீண்டும் யோசனை முன்வைக்கவுள்ளதாக எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டபோது, அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மசகு எண்ணெய்யின் விலை அதிகரிப்பினால், டீசல் ஒரு லீற்றருக்கு 128 ரூபாவும், பெற்றோல் ஒரு லீற்றருக்கு 80 ரூபாவும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.