![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/03/slmmf-muslim-media-forum-e1647024865706.png)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மகாநாடு இன்று 12 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு அல் ஹிதாயா கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் ஷிஹான் தெரிவித்தார்
இவ்வருடாந்த மகாநாட்டில் பிரதம அதிதியாக ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 ஆவது வருடாந்த மகாநாடு குறித்து அதன் அங்கத்தவர்கள் அனைவருக்கும் கடிதம் மூலம் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அரசினால் வெளியிடப்பட்டுள்ள கோவிட்19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய வருடாந்த மகாநாடு நடைபெறவுள்ளதாகவும் போரத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்