உள்நாடு
பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில் அடுத்த வாரம் தீர்வு.
![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/03/Dilum-Amunugama-1.jpg)
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பேருந்துக் கட்டணங்கள் தொடர்பில், அடுத்த வாரத்தின் முற்பகுதியில் தீர்வொன்றைப் பெற்றுத்தருவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
பேருந்து உரிமையாளர்களுக்கு, டீசல் மானியத்தை வழங்க முடியுமா என்பது குறித்து, நிதி அமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக, அவர் மேலும் தெரிவித்துள்ளார்.