ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேற்றை பெரும்பாலும் இன்றைய தினத்துக்குள் வெளியிடுவதற்கு முயற்சிப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேற்றை நேற்றிரவு வெளியிடுவதற்கு உத்தரவிட எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தினேஸ் குணவரத்ன, காலி – பிடிகல பகுதியில் நேற்று முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.
கடந்த ஜனவரி மாதம் 22ஆம் திகதி இடம்பெற்ற 2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரீசில் பரீட்சைக்கு 340,508 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
2,943 பரீட்சைகள் நிலையங்கள் இதற்காக தயார் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.