![](https://www.timesceylon.lk/wp-content/uploads/2022/03/E0AA4DF2-4976-4F91-8146-5CB7A0B03142-780x470.jpg)
நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை கையளித்துள்ளார்.
நீர் வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) அவர் அதனை உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எம்.பிக்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர், அண்மையில் ஜனாதிபதியினால் பதவி விலக்கப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, குறித்த இருவருக்கும் நியாயம் கிடைக்க வேண்டுமென தெரிவித்திருந்தார். அத்துடன் தான் தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகாத போதிலும் அமைச்சின் செயற்பாடுகளிலிருந்து விலகி இருக்கப்போவதாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.