crossorigin="anonymous">
பொது

‘பதவி விலகுவேன்’ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தான் ஏற்கனவே அறிவித்தபடி பதவி விலகுவேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். பிரதமரின் ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய நாளை மறுதினம் ஜூலை 13 ஆம் திகதி, புதன்கிழமை இராஜினாமா செய்யவுள்ளதாக, தனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாக, ஜூலை 09ஆம் திகதி மாலை இலங்கை பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன அறிவித்திருந்தார்.

ஜூலை 09 மாபெரும் மக்கள் எழுச்சி போராட்டத்தைத் தொடர்ந்து, கட்சித் தலைவர்களுடனான அவசர கூட்டத்தின் பின்னர் அதில் எட்டப்பட்ட முடிவுகளை, சபாநாயகர் ஜனாதிபதிக்கு எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தை உடனடியாக பதவி விலகுமாறு கோரி இன, மத, அரசியல் கட்சி வேறுபாடு இன்றி நாட்டின் நாளா பாக்களிலிருந்தும் வருகை தந்த பொது மக்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று முன்தினம் (09) முதல் கொழும்பில் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 29 − 21 =

Back to top button
error: