‘Fly Dubai’ இலங்கைக்கான விமான சேவை இடைநிறுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலை காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் Fly Dubai நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது.
டுபாய் – கொழும்பு இடையிலான விமான சேவைகள் ஜூலை 10ஆம் திகதி முதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரத்து செய்யப்பட்ட விமானங்களின் பற்றுச்சீட்டு மற்றும் பணம் என்பன பயணிகளுக்கு திரும்ப வழங்கப்படும் என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வேதேச விமான நிலையத்தில் தொழிற்சங்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக விமான நிலையத்தில் உள்ள வி.ஐ.பி. டெர்மினல் முனையத்தின் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நேற்று (11) நள்ளிரவு (12) முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலகியுள்ளனர்.
நேற்று நள்ளிரவு முதல் மறு அறிவித்தல் வரை சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
இலங்கையில் நிலவும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிக்குகாரணமான முன்னாள் அரசியல்வாதிகள் விஐபி டெர்மினல் ஊடாக நாட்டை விட்டு தப்பித்து வெளியேறுவார்கள் என ஊகிக்கப்படுகின்றது.
இலங்கையில் அரசியல் நெருக்கடி காரணமான முன்னாள் அரசியல்வாதிகள் நாட்டை விட்டு வெளியேற முயற்சிப்பதை தடுக்கும் வகையில் அவர்கள் கடமைகளில் இருந்து விலகுவதற்கு தீர்மானித்ததாக அச்சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.