crossorigin="anonymous">
உள்நாடுபொது

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பில்

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினம் இன்று (04) கொண்டாடப்படுகிறது.

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின விழா கொழும்பு காலி முகத்திடலில் கொண்டாடப்படுகிறது

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் இன்றைய நிகழ்வுகள் இடம்பெறுகிறது

இலங்கையின் 75 ஆவது சுதந்திர தின விழாவிற்கு 3100 க்கும் அதிகமானவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக இலங்கை உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. அதில் பங்கேற்பதற்காக வெளிநாட்டு ராஜதந்திரிகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

சுதந்திர தின நிகழ்வுகளில் மூவாயிரத்து 284 இராணுவத்தினர், 179 யுத்த வாகனங்கள், 867 கடற்படையினர் மற்றும் அவர்களது 52 வாகனங்களும் பயன்படுத்தப்படுகிறது

வான் படையின் 695 உத்தியோகத்தர்களும், 336 பொலிஸார் சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்கின்றனர்.

பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்த 220 பேரும் இன்றைய சுதந்திர நிகழ்வில் இணையவுள்ளனர்.

75 ஆவது. சுதந்திர தின கொண்டாட்டத்திற்கான செலவு 200 மில்லியன் ரூபா என அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer − 3 = 2

Back to top button
error: