ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் ஊடகக் கருத்தரங்கு
ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் நடாத்தும் 73ஆவது ஊடகக் கருத்தரங்கு இன்று (19) ஞாயிற்றுக்கிழமை ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரி (தேசிய பாடசாலை யில்) நடைபெறவுள்ளது.
ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் பழைய மாணவர்கள் சங்கத்துடன் இணைந்து நடாத்தப்படும் இக்கருத்தரங்கு இரு அம்சங்களாக இடம்பெறவுள்ளது.
பாடசாலைகளின் ஊடகக்கழக அங்கத்தவர்கள் , பொறுப்பாளர்கள் மற்றும் பழைய மாணவர்களுக்கு புறம்பான ஒரு கருத்தரங்கும் அல் அஸ்ஹர் உட்பட பிரதேச பாடசாலை மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கொன்றும் புறம்பாகவும் நடைபெறவுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவி திருமதி புர்கான் பீ இப்திகார் மற்றும் அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் அதிபர் எம்.சி.எம்.நவாஸ் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இக்கருத்தரங்கு நடைபெறும்.
இக்கருத்தரங்கில் முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டாளரும் நவமணி பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன், மீடியா போரத்தின் பொதுச் செயலாளரும் ஊடாக பயிற்றுவிப்பாளருமான சிஹார் அனீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஊடக பயிற்றுவிப்பாளருமான தாஹா முஸம்மில், விடிவெள்ளி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் எம் . பி. எம் பைரூஸ், போரத்தின் நிறைவேற்று குழு உறுப்பினரான ஊடகவியலாளர்சாமிலா ஷரீப், உப தலைவர் எம். ஏ. எம். நிலாம், உதவி பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்று குழு உறுப்பினரான அஷ்ரப் ஏ ஸமத் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை, அன்றைய தினம் மாலை இடம்பெறும் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் பைஸல் ஆப்தீன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்வார் என கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஆதில் அலி சப்ரி தெரிவித்தார்.
இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பிரதிநிதிகள் குழுவுக்கும் கேகாலை மாவட்ட மீடியா போரத்தின் உறுப்பினர்களுக்கு இடையிலான விஷேட கலந்துரையாடலும் இந்த நிகழ்வின்போது இடம் பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது