ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மின் விநியோகம், எரிபொருள் மற்றும் வைத்தியசாலை சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி (17) வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தரவின் பேரில், ஜனாதிபதியின் செயலாளரினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கிணங்க,
1. மின்சார விநியோகம் தொடர்பான சகல சேவைகள்,
2. பெட்ரோலிய உற்பத்திகள் மற்றும் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்,
3. வைத்தியசாலைகள், மருந்தகங்கள் மற்றும் அதுபோன்ற ஏனைய நிறுவனங்களில் நோயாளர்களின்
பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு, போசாக்கூட்டல் மற்றும் சிகிச்சை அளித்தல்
ஆகியவை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த நிறுவனங்களால் வழங்கப்படும் சேவைகள் பொதுமக்கள் வழமையாக தமது வாழ்வை முன்னெடுக்க இன்றியமையாதவை என்பதால், அந்த சேவைகளுக்கு தடையோ இடையூறு ஏற்படக்கூடாது என்பதால் இந்த விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.