ரஷ்யாவின் விளாடிமிர் பிராந்தியத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கைத்தொழில் அமைச்சர் சிடொரின் செர்கி மற்றும் விளாடிமிர் பிராந்தியத்தின் கமேஷ்கோவோ மாவட்டத்தின் நிர்வாகத் தலைவர் குர்கன்ஸ்கி அரியாடோலி ஆகியோர் அடங்கிய ரஷ்ய தூதுக் குழுவினர் இலங்கை பாராளுமன்ற பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவை அண்மையில் (17) பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.
இந்த நாட்டிற்கு வரும் ரஷ்ய சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் இந்நாட்டில் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிப்பது உள்ளிட்ட இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இங்கு விவாதிக்கப்பட்டது.
இலங்கையின் நண்பன் என்ற வகையில் அதிகபட்ச ஆதரவை வழங்க ரஷ்யா எதிர்பார்ப்பதாக விளாடிமிர் பிராந்திய பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து தூதுக் குழுவினர் பாராளுமன்ற வளாகத்தைப் பார்வையிட்டனர்.
இந்த நிகழ்வில் கொழும்பில் உள்ள ரஷ்யன் இல்லத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்தபிரியா ராமநாயக்கவும் கலந்துகொண்டார்.