crossorigin="anonymous">
உள்நாடுபொது

மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்க ஜப்பான் 46 மில்லியன் டொலர் நன்கொடை

இலங்கை முழுவதும் உள்ள அரச மருத்துவமனைகளுக்கு டீசல் வழங்குவதற்காக ஜப்பானிய அரசாங்கம் 46 மில்லியன் டொலர்களை மனிதாபிமான நன்கொடையாக வழங்கியுள்ளது.

இது தொடர்பான ஒப்பந்தம், கைச்சாத்திடும் நிகழ்வு நேற்று முன்தினம் (22) இலங்கை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி (Mizukoshi Hideaki) ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

இந்த உடன்படிக்கையின் பிரகாரம் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 20 மில்லியன் லீற்றர் டீசலை வழங்கவுள்ளதாகவும் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலைமையில் இலங்கையில் மருத்துவ சேவைகளை இலகுபடுத்தும் நோக்கில் இந்த மனிதாபிமான உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 92 − = 85

Back to top button
error: