2022ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 157 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன் எதிராக 64 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இன்று மாலை 06.05 மணிக்கு வாக்கெடுப்பு இடம்பெற்றது.
நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ அவர்களினால் 2022 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு (வரவுசெலவுத்திட்ட உரை) நவம்பர் மாதம் 12 ஆம் திகதி முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 13 சனிக்கிழமை முதல் நவம்பர் 22ஆம் திகதி வரை 07 நாட்கள் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது.
நவம்பர் 22ஆம் திகதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் இரண்டாவது வாசிப்பு 93 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 153 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நவம்பர் 23ஆம் திகதி குழுநிலை விவாதம் ஆரம்பமானதுடன், சனிக்கிழமைகள் உள்ளடங்கலாக இன்று வரை (டிசம்பர் 10) 16 நாட்கள் குழுநிலை விவாதம் இடம்பெற்றது.