இலங்கையில் தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை, செப்டெம்பர் 6 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிப்பதற்கு, இன்று (27) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற விசேட கொவிட் செயலணிக் கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் இருக்கும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் எதிர்வரும் செப்டெம்பர் 6 ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை நடைமுறையில் இருக்கும்.