crossorigin="anonymous">
விளையாட்டு

இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி!

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 238 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதற்கமைய அந்த அணி 59.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 92 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் பிரவீன் ஜயவிக்ரம 81 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதனையடுத்து, தமது முதல் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 35.5 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 109 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக அஞ்சலோ மேத்யூஸ் 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 24 ஓட்டங்களுக்கு 05 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை பெற்றிருந்த வேளையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக ஸ்ரேயாஷ் ஐயர் 67 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இலங்கை அணியின் லசித் எம்புல்தெனிய 87 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இதற்கமைய, இலங்கை அணிக்கு ஓட்டங்கள் வெற்றி இலக்காக 447 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து 447 என்ற வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாம் இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 59.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 208 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.

அணிசார்பில் அதிகபடியாக திமுத் கருணாரத்ன 107 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் 55 ஓட்டங்களுக்கு 04 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 63 + = 67

Back to top button
error: