நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, புதிய பேருந்து கட்டணங்கள் அடங்கிய பட்டியில் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் இந்த கட்டணப்பட்டியல் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, 17 ரூபாவாக இருந்த ஆகக்குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக, பேருந்து பயண கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும் அல்லது எரிபொருள் நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என பேருந்து சங்கங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.