உள்நாடுபிராந்தியம்
சீரமைவான நீர்ப்பாசன மற்றும் விவசாயத்.செயற்திட்ட கலந்துரையாடல்
உலக வங்கியின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படும் ( CSIAP) Climate Smart Irrigated Agriculture Project காலநிலைக்கு சீர் அமைவான நீர்ப்பாசன மற்றும் விவசாயத் திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இன்று (14) நடைபெற்றது.
திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் ஆராயப்பட்டதோடு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றபோது எழுகின்ற சவால்கள்,எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள செயற் திட்டங்களுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டது.
இக்கலந்துரையாடலில் கிளிநொச்சி செயலக அதிகாரிகள்,மற்றும் செயற்திட்டங்களோடு தொடர்புடைய திணைக்கள தலைவர்களும் கலந்து கொண்டனர்.