
சவூதி அரேபிய வெளிவிவகார அமைச்சர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌத் இலங்கையின் முக்கிய தரப்பினருடன் இன்று கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை சந்தித்து அவர் முக்கிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.
அத்துடன், வெளியுறவு அமைச்சர் GL பீரிஸ், வெளியுறவு அமைச்சின் செயலாளர் மற்றும் இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்ட தரப்பினர் இதன்போது கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.