நைஜீரியாவில் காலவரையின்றி ட்விட்டருக்கு தடை
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் அதிபராக முகமது புஹாரி (78) பதவி வகிக்கிறார், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி ட்விட்டரில் அண்மையில் வெளியிட்ட பதிவில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரியஉள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அரசை எதிர்ப்பவர்களுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் மொழியிலேயே பதில் அளிக்கப்படும்” என கூறியிருந்தார்.
நைஜீரியாவில் மீண்டும் உள்நாட்டுப் போரை தூண்டும் வகையில் அதிபர் முகமது புஹாரி கருத்து தெரிவித்திருப்பதாக குற்றம்சாட்டிய ட்விட்டர் நிர்வாகம், அவரது பதிவை நீக்கியது.
இது குறித்து அந்த நாட்டு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் லாய் முகமது கூறும்போது, “நைஜீரியாவில் ட்விட்டரின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்பும் வகையில் உள்ளன. போலீஸ் நிலையங்களை எரித்து, போலீஸாரை கொலை செய்வோரின் பதிவுகள், வீடியோக்கள் ட்விட்டரில் வெளியாகின்றன. அதேநேரம் நாட்டின்பாதுகாப்பை கருதி அதிபர்வெளியிட்ட பதிவு நீக்கப்பட்டிருக் கிறது. எனவே எங்கள் நாட்டில் ட்விட்டருக்கு காலவரையின்றி தடை விதிக்கப்படுகிறது” என்றார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன.(இந்து)