crossorigin="anonymous">
உள்நாடுபொது

மோடியை சந்தித்தார் பசில்

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ - நரேந்திர மோடி சந்திப்பு-Basil Rajapaksa Meets Narendra Modi

இரு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்றையதினம் (15) இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, புது டெல்லியில் வைத்து  பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துள்ளார்.

பசில் ராஜபக்ஷ - நரேந்திர மோடி சந்திப்பு-Basil Rajapaksa Meets Narendra Modi

இதேவேளை, இந்திய வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் சந்தித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் எரிபொருள், உணவு, மருந்து இறக்குமதி தொடர்பில் இந்தியாவிடமிருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் பெறுவதை நோக்காகக் கொண்ட ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட பசில் ராஜபக்‌ஷ இந்தியா சென்றுள்ளார்.

இவ்விஜயத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்‌ஷவுடன், அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர். ஆட்டிகலவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 53 − = 46

Back to top button
error: