நிதி அமைச்சினால், ஏற்கனவே இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படும் பழங்கள் உள்ளிட்ட 9 பொருட்களுக்காக அறவிடப்படும் விசேட பண்ட வரி மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு கிலோகிராம் அப்பிள் 200 ரூபாவினாலும், தோடம்பழம் 75 ரூபாவினாலும், திராட்சைப்பழம் 100 ரூபாவினாலும், விசேட பண்ட வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மார்ச் மாதம் 10ஆம் திகதி முதல் நடைமுறையாகும் வகையில், எதிர்வரும் 6 மாத காலப்பகுதியில் இந்த விசேட பண்ட வரி அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் யோகட், தயிர் என்பனவும் அவற்றில் அடங்குகின்றன.