இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நாளை (19)சனிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் (20) ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இன்று (18) வெளியிட்டுள்ளது.
எரிபொருள் இன்மை காரணமாக இலங்கை மின்சார சபை விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கிணங்க இவ்வாறு மீண்டும் திட்டமிட்ட மின்வெட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையை 20 வலயங்களாக A,B,C,D,E,F,G,H,I,J,K,L | P,Q,R,S,T,U,V,W பிரித்து ஒவ்வொரு வலயத்திலும் உள்ள பிரதேசங்களில் இரு கட்டங்களில் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (19) சனிக்கிழமை மின்வெட்டு A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 3⁄4 மணித்தியாலங்களும் மு.ப. 8.00 – பி.ப. 6.00 வரை 2½ மணி நேரம் மற்றும் பி.ப. 6.00 – இரவு 11.00 வரை 1¼ மணி நேரம் மற்றும் P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 3 மணித்தியாலம் மாத்திரம்: மு.ப. 10.00 – பி.ப. 4.00 வரை 1½ மணி நேரம், பி.ப. 4.00 – இரவு 10.00 மணி வரை 1½ மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
நாளை மறுதினம் (20) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டு A,B,C,D,E,F,G,H,I,J,K,L இலுள்ள பிரதேசங்களுக்கு இரு கட்டங்களில் 3 1⁄4 மணித்தியாலங்களும் மு.ப. 9.00 – பி.ப. 5.00 வரை 2 மணி நேரம் மற்றும் பி.ப. 5.00 – இரவு 10.00 வரை 1¼ மணி நேரம், P,Q,R,S,T,U,V,W இலுள்ள பிரதேசங்களுக்கு ஒரு கட்டத்தில் 1 1⁄4 மணித்தியாலம் மாத்திரம்: பி.ப. 4.30 – இரவு 9.30 மணி வரை 1¼ மணி நேரம் மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.