crossorigin="anonymous">
உள்நாடுபொது

நயினாதீவு ரஜமஹா விகாரை புனித பூமியாக பிரகடனம்

யாழ்ப்பாணம் – நயினாதீவு ரஜமஹா விகாரையை புனித பூமியாக பிரகடனப்படுத்தி அதற்கான சன்னஸ் பத்திரத்தை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்றுமுன்தினம் (19) வழங்கி வைத்தார்.

நயினாதீவு ரஜமஹா விகாரைக்கு விஜயம் செய்த பிரதமர், முதலில் அமரபுர மஹா சங்க சபையின் தலைவர் வணக்கத்திற்குரிய கங்துனே அஸ்ஸஜி மகா நாயக்க தேரர் மற்றும் நயினாதீவு பீடாதிபதி வணக்கத்திற்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரரை சந்தித்தார்.

புனித பூமி பணிப்பாளர் ருச்சிர விதான, புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தனவிடம் சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார், அதன் பின்னர் செயலாளர் சன்னஸ் பத்திரத்தை வாசித்தார். சன்னஸ் பத்திரம் பேராசிரியர் கபில குணவர்தனவினால் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.

பிரதமர் ஸ்ரீலங்கா அமரபுர மகா நிகாயாவின் அம்பகஹபிட்டிய பிரிவின் பிரதம சங்க தலைவர் நயினாதீவு ரஜமஹா விகாரை விகாராதிபதி வண. நவதகல பதுமகித்தி திஸ்ஸ நாயக்க தேரருக்கு வழங்கினார்.

நிகழ்வின் நிறைவில் நயினாதீவில் உள்ள ஸ்ரீ நாகபூஷணி அம்மன் கோவிலில் பிரதமர் வழிபாட்டில் ஈடுபட்டார்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 71 − 62 =

Back to top button
error: