உள்நாடுபிராந்தியம்
மடவளை பஸார் தொலைபேசிக் கோபுர வீதி பிரதேச மக்களால் திருத்தியமைப்பு
(ஜவாஹிர் எம் ஹாபிஸ்)
கண்டி – பாத்ததும்பறைப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மடவளை பஸார் தொலைபேசிக் கோபுர வீதி (டவர் லேன்) கடந்த பல வருடங்களாக திருத்தப்படாமல் இருந்தது.
நேற்று (21) பிரதேச மக்கள் ஒன்றிணைந்து சுமார் 8 இலட்ச ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையில் சுமார் 200 மீட்டர் தூரம் வரை அதனை திருத்தி அமைத்தனர்