crossorigin="anonymous">
உள்நாடுபொது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷச தலைமையில் சர்வ கட்சி மாநாடு

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் சர்வ கட்சி மாநாடு ஜனாதிபதி இல்லத்தில் இன்று (23) ஆரம்பமாகியுள்ளது.

இதில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி ரணில் விக்ரமசிங்க, தேசிய காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி, லங்கா சமசமாஜ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் அபே ஜனபல கட்சியை பிரதிநித்துவப்படுத்தி அத்துரலியே ரத்தன தேரர் ஆகிய இருவரும் 11 அரசாங்கப் பங்காளிக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ள தீர்மானித்துள்ளது

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உட்பட பல எதிர்க்கட்சிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என தீர்மானித்துள்ளதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேசிய சுதந்திர முன்னணி, பிவித்துரு ஹெல உருமய, ஜனநாயக இடதுசாரி முன்னணி, ஜனநாயக ஜனதா பெரமுன, ஜாதிக ஜன பலவேகய உள்ளிட்ட பல கட்சிகள் சர்வகட்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 33 = 37

Back to top button
error: