முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு
மட்டக்களப்பு மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிநெறிக் கருத்தரங்கு நேற்று (25) வெள்ளிக்கிழமை காலை 8.30 தொடக்கம் பி.ப 12.30 மணி வரை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
சிறுவர்களுக்கான செயலகமும் மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் இணைந்து நடாத்திய குறித்த பயிற்சிநெறிக் கருத்தரங்கானது மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது
முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கருத்தரங்கிற்கு வளவாளர்களாக மாவட்ட முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் வீ.முரளிதரன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்பிள்ளை அபிவிருத்தி உதவியாளர் ரீ.மேகராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறந்த முறையில் வளவாண்மையாற்றியிருந்தனர்.
இதன்போது முன்பள்ளி மாணவர்களை எவ்வாறு ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்பது தொடர்பான வழிகாட்டி முறைகள் தொடர்பாகவும், மாணவர்களை கற்பிக்கும் போது ஏற்படும் பிரச்சனைகள் அவற்றை எவ்வாறு நிவர்த்திப்பது போன்ற பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக இதன் போது விரிவாக விளக்கமளிக்கப்பட்டிருந்தது.
மாணவர்களை சுதந்திரமான புறச்சூழலில் கற்பிக்கும் வண்ணமான வடிவமைப்பில் முன்பள்ளி பாடசாலைகளை அமைப்பதற்காக முறைப்படுத்தல் விதிமுறைகள் தொடர்பாகவும் இதன்போது ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செயலமர்வில் மாவட்ட செயலக சிறுவர் மற்றும் மகளிர் அபிவிருத்திப் பிரிவிற்கு பொறுப்பான பதவிநிலை உத்தியோகத்தர் மொகமட் றில்லா உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.