மின்தடை காரணமாக வர்த்தக நிலையங்களில் குளிர்சாதனப் பெட்டிகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் காலாவதியாகும் நிலைமை ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டதாக பொதுசுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்
இந்த நிலையில் காலாவதியான உணவுகளை விற்பனை செய்துள்ள 407 விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
எனவே, குளிர்சாதனப் பெட்டிகளில் சேமித்து வைக்கப்படும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது நுகர்வோர் அவதானத்துடன் செயற்படுமாறும் இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.