லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் நேற்று (26) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தனது அனைத்து வகையான பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 49 ரூபாவினால் அதிகரித்துள்ளது.
இதன்படி, அந்நிறுவனம் விற்பனை செய்யும் 92 ஒக்டேன் பெற்றோலின் புதிய விலை 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐ. ஓ சி இந்த ஆண்டு மட்டும் நான்கு முறை விலையை உயர்த்தியுள்ளது.
டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதே எரிபொருள் விலை உயர்வுக்கு காரணம் என அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார்.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 254 ரூபாவில் இருந்து 303 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
283 ரூபாவாக இருந்த 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 332 ரூபாவாகும்.
யூரோ 03 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 263 ரூபாவில் இருந்து 312 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் விற்பனை செய்யும் ஒட்டோ டீசல் மற்றும் சூப்பர் டீசல் விலைகள் திருத்தப்படவில்லை.
இதற்கிடையில், சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தொடர்ந்து மக்கள் வரிசையில் நிற்பதை காணக்கூடியதாக உள்ளது.
ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
இதேவேளை, சிபெட்கோ எரிபொருள் விலைகள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே விளக்கமளிக்கையில்,
தற்போதைய நிலையில் சிபெட்கோவின் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படாது என தெரிவித்தார்.