crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

உடுநுவரை விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலை கட்டிட திறப்பு விழா

உடுநுவரை பிரதேசத்தில் இருக்கின்ற சகல சமூகங்களையும் சேர்ந்த சுமார் 100 விஷேட தேவையுடைய மாணவர்கள் கற்கக் கூடிய சகல வசதிகளும் கொண்ட உடுநுவரையில் விஷேட தேவையுடைய மாணவர்களுக்கான பாடசாலைக் கட்டிடத் தொகுதி நேற்று (26) அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

இக்கட்டிடத் தொகுதி நூலகம், கணணி அறை, விளையாட்டுத் திடல், கேட்போர் கூடம், வரவேற்பு மண்டபம், வகுப்பறைகள், Speech therapy area, Physiotherapy, Speech therapy area, Occupation therapy area முதலான நவீன வசதிகளைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

உடுநுவரை அபிவிருத்தி நிதியத்தின் கிளை நிறுவனமாக உடுநுவரை பிரதேசத்தில் இருக்கின்ற விசேட தேவையுடைய மாணவர்களுக்காக 2018 ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர தினத்தன்று பத்து
மாணவர்களுடனும் 4 ஆசிரியர்களுடனும் அந்நூர் மத்திய நிலையம் என்ற பெயரில் இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர். ரஞ்சித் பண்டார, ஸம் ஸம்  நிறுவனத்தின் தலைவர் முப்தி. யூசுப் ஹனிபா, உடுநுவரை அபிவிருத்தி நிதியம் மற்றும் பாடசாலை அமைந்திருக்கின்ற காணியை அன்பளிப்புச் செய்த  அல்ஹாஜ் பஹ்மி மஹ்ரூப் மற்றும் குடும்பத்தினர், அரச அதிகாரிகள், மதத்தலைவர்கள் ஊர்ப் பிரமுகர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.

 

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 56 = 60

Back to top button
error: