அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி முகவர் (USAID) ஊடாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ஜே.சுங் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று ஜனாதிபதி ராஜபக்ஷவை சந்தித்த போது தூதுவர் இதனைக் குறிப்பிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
தூதுவர் ஜூலி சுங் ஒரு ட்வீட்டில், சமீபத்திய அமெரிக்க – இலங்கை கூட்டாண்மை உரையாடல், ஜனநாயக, வளமான மற்றும் இறையாண்மை கொண்ட இலங்கைக்கான அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக்காட்டுகிறது.
அமெரிக்க தூதுவரின் ட்வீட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “நான் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து இலங்கையின் பொருளாதார சவால்கள் மற்றும் மக்களை உள்ளடக்கிய நிர்வாகத்தை மேம்படுத்துவதற்கும் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுவது என்பது குறித்து கலந்துரையாடுவதற்காக” என குறிப்பிட்டுள்ளார்.