ஆசீர்வாத கரங்கள் தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலைய திறப்பு விழா
ஆசீர்வாத கரங்கள் அமைப்பினால் கடந்த 2014 ஆம் ஆண்டு மட்டக்களப்பு மயிலெம்பாவெளியில் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மானிக்கப்பட்டு வந்த தொழிற்பயிற்சி வழிகாட்டல் நிலையம் நாளை( 30) புதன் கிழமை மாலை 4.30 மணிக்கு திறந்துவைக்கப்படவுள்ளது.
அதற்கான ஊடக சந்திப்பொன்று மட்டக்களப்பில் உள்ள தனியார் விடுதியில் போதகர் வின்சன்ட் அவர்களது தலைமையில் இடம்பெற்றிருந்தது.
இதன்போது போதகர் வின்சன்ட் கருத்து தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள இளைஞர்கள், சிறுபிள்ளைகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு நல்லதொரு ஆசீர்வாதமாக இந்த நிலையம் அமையப்போகின்றது. முதலாவதாக இந்த பயிற்சி நிலையத்தில் இளைஞர்களுக்கு சரியான ஒரு தலைமைத்துவப் பண்பினை உருவாக்குவதற்காகவும், அவர்களுக்குள் ஏற்பட்டிருக்கின்ற சில விதமான பழக்க வழக்கங்கள் ஊடாக தமது வாழ்கையனை வீனாக்கிக்கொண்டிருக்கும் இவர்களை சரியான வழிக்கு கொண்டுவர வேண்டும் என்ற சிந்தனையிலேயே குறித்த பயிற்சி நிலையத்தை நாங்கள் நாளை திறந்துவைக்கவுள்ளோம்.
முதல் கட்டமாக குறிப்பிட்டளவிலான இளைஞர்களை உள்வாங்கி இந்த முதற்கட்ட பயிற்சியினை ஆரம்பிக்க உள்ளதாகவும், நாளடைவில் அதிகளவிலான இளைஞர்களி உள்வாங்கி நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களையும் கருத்திலெடுத்தே இந்த நிலையத்தின் சேவைகள் இங்கு இடம்பெறவுள்ளதாகவும்” இதன்போது போதகர் வின்சன்ட் தெரிவித்திருந்தார்.