37,500 மெட்ரிக் டன் எரிபொருளை தாங்கிவந்த கப்பலிலிருந்து திட்டமிட்டவாறு இன்றைய தினம் எரிபொருளை இறக்குமதிசெய்ய முடியாது போயுள்ளது.
எனவே, நாளை (30) மற்றும் நாளை மறுதினம் (31) எரிபொருள் நிலையங்களில் டீசலுக்காக வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.
எவ்வாறாயினுள், அத்தியாவசிய சேவைகளுக்குகாக தொடர்ச்சியாக டீசல் விநியோகிக்கப்படும். அத்துடன், எவ்வித பற்றாக்குறையும் ஏற்படாதவாறு வழமைபோல பெற்றோல் வழங்கப்படும் என்றும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.