LIOC யிடமிருந்து 6,000 மெற்றிக் தொன் டீசலை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாளைய தினம் (31) வரவுள்ள டீசலைக் கொண்ட கப்பல் வரும் வரை, இவ்வாறு டீசலை கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக, எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் டீசலை, மின் உற்பத்தி உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக பயன்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் தமக்கு அறிவிக்குமாறு எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நேற்று (29) இடம்பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் காமினி லொக்குகே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தமக்கு தனிப்பட்ட முறையில் அறிவிக்க முடியுமென தெரிவித்துள்ள அமைச்சர் தனது தொலைபேசி இலக்கத்தையும் (0777414241) வழங்கியுள்ளார்.
0777414241 எனும் குறித்த தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு குறித்த பிரச்சினை தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறும், அப்பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்பதற்கான தலையீட்டை தான் மேற்கொளவதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு அடுத்த வாரத்திற்குள் தீர்க்கப்படுமென அமைச்சர் காமினி லொக்குகே இதன் போது சுட்டிக்காட்டினார்.