இலங்கை, கொழும்பு பங்குச் சந்தை இலங்கை முழுவதும் நிலவும் மின் வெட்டு காரணமாக தினசரி வர்த்தக நடவடிக்கை காலத்தை 2 மணி நேரமாக மட்டுப்படுத்த தீர்மானித்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தை அதன்படி இன்றும் (31) நாளையும் (01) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மாத்திரம் பங்குச் சந்தை நாளாந்த வர்த்தகத்திற்காக நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்துள்ளது.