crossorigin="anonymous">
வெளிநாடு

ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இந்தியா வருகை

ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜேய் லாவ்ரோவ் இன்று (01) இந்தியா வருகை தந்துள்ளார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது, அவர் இந்திய வழக்கப்படி இருகைகளையும் கூப்பி வணக்கம் தெரிவித்தார். பல்வேறு உலக நாடுகளுக்கு ரஷ்யா எதிரி நாடாக கருதப்படலாம், ஆனால் இந்தியாவில் அது நட்பு நாடாக கருதப்படுகிறது.

ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் இந்தியா எண்ணெய் வாங்குவது குறித்து, லாவ்ரோவ் இன்று இந்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் விவாதிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்புக்குப் பிறகு லாவ்ரோவ் இந்தியா வருவது இதுவே முதன்முறை. பிரிட்டன் வெளியுறவு செயலாளர் லிஸ் ட்ரஸ் இந்தியா வந்த மறுநாள் லாவ்ரோவ் இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். லிஸ் ட்ரஸ் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை சந்திக்காத நிலையில், லாவ்ரோவ் பிரதமரை சந்திக்க உள்ளார்.

யுக்ரேன் விவகாரத்தில் இந்தியா தொடர்ந்து நடுநிலையை வகிக்கிறது. தாக்குதல் (யுக்ரேன் மீதான) நிறுத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோதி வலியுறுத்தியுள்ள நிலையில், ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்கு அவர் கண்டனம் தெரிவிக்கவில்லை.

இந்தியாவும் ரஷ்யாவும் பல தசாப்தங்களாக உறவை பேணிவருகிறது. இந்தியா பெரும்பாலான ஆயுதங்களை ரஷ்யாவிடமிருந்து வாங்குகிறது. ஆனால், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய்யை வாங்குவது குறித்து இன்று விவாதிக்கப்படலாம்.

எண்ணெய்யை வாங்குவதற்கு பொருளாதார தடைகளை மீறாத கட்டண முறைகளை இந்தியாவுக்கு ரஷ்யா ஏற்படுத்தியுள்ளது. ஆனால், நேற்று டெல்லி வந்திருந்த அமெரிக்க துணை பாதுகாப்பு ஆலோசகர், ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தவிர்க்கும் நாடுகள் “விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்” என தெரிவித்திருந்தார்.

இந்தியாவின் எரிசக்தி விநியோகத்தில் ரஷ்யாவிடமிருந்து வாங்கப்படும் எண்ணெய் குறைவான விகிதம் தான் எனவும், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகள் இன்னும் அதிகளவில் வாங்குவதாகவும் இந்திய அதிகாரிகள் கூறியுள்ளனர்.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer + 56 = 63

Back to top button
error: