இலங்கையில் நேற்றிரவு முதல் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மற்றும் யூ-டியூப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகத் தளங்களுக்கான அணுகல் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இலங்கை முழுவதும் நேற்று மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது
ஊரடங்குச் சட்டத்தின்போது அத்தியாவசிய சேவைகளுக்காக தவிர இலங்கையர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இலங்கையில் உள்ளுர் நேரப்படி ஏப்ரல் 3, 2022 ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு சமூக ஊடக தளங்களின் கட்டுப்பாட்டை NetBlocks அளவீடுகள் உறுதிப்படுத்தியுள்ளன.