இலங்கையின் உணவு தட்டுப்பாட்டை போக்க அந்த நாட்டுக்கு இந்தியா சார்பில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பப்பட உள்ளது. இதில் முதல்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது.
இது குறித்து மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குநர் கிருஷ்ண ராவ் கூறும்போது, ‘முதல்கட்டமாக இந்தியாவில் இருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்பட உள்ளது.
அடுத்த சில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் இலங்கையின் உணவுத் தட்டுப்பாடு குறையும். மேலும் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும்” என்றார்.(இந்து)