crossorigin="anonymous">
வெளிநாடு

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு, 90 நாட்களுக்குள் தேர்தல்

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மீது எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடத்தப்படாமலேயே நாடாளுமன்றத்தை கலைக்க அந்நாட்டு அதிபர் ஆரிஃப் அல்வி உத்தரவிட்டுள்ளார்.

ஆளும் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம், பாகிஸ்தான் அரசியலமைப்பின் 5ஆம் பிரிவுக்கு எதிராக இருப்பதாக துணை சபாநாயகர் அவையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் நாடாளுமன்றம் கூடியபோது வாக்கெடுப்பு தொடங்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் இம்ரான் கான் நாட்டு மக்களுக்கு ஆற்றிய தொலைக்காட்சி உரையில் தன் மீதான நம்பிக்கை இல்லா தீர்மானம் அமெரிக்காவால் முன்னெடுக்கப்படும் சர்வதேச சதி என்று குற்றம்சாட்டிப் பேசினார்.

அமெரிக்காவின் கொள்கை மற்றும் பிற நாடுகள் மீதான அமெரிக்க கொள்கையை தாம் விமர்சித்து வருவதாக தமது அரசாங்கத்தை வீழ்த்த அமெரிக்க சதி செய்ததாக இம்ரான் கான் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பரிந்துரை செய்துள்ளதாகவும் இம்ரான் கான் தெரிவித்தார். “நாட்டு மக்கள் தேர்தலுக்குத் தயாராக வேண்டும். நாட்டின் எதிர்காலத்தை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும். வெளி ஆட்கள் அல்ல” என்றும் அவர் கூறினார்.

ஆனால், இம்ரான் கான் சுமத்தும் குற்றச்சாட்டுகளை அந்நாட்டு எதிர்கட்சிகளும் அமெரிக்காவும் மறுத்துள்ளன.

இம்ரான் கானின் அரசியல் எதிரிகள் மற்றும் அவரது கட்சியுடன் கூட்டணி வைத்திருந்த பல கட்சிகளை தங்களுக்கு ஆதரவளிக்கச் செய்யும் முயற்சியில் வெற்றி பெற்ற பிறகே, நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பை எதிர்கட்சிகள் கோரின.(பிபிசி)

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 41 − 39 =

Back to top button
error: