இலங்கை மற்றும் பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள நிலையை புரிந்து கொண்டுள்ள நேபாளம் அண்மையில் சீனா பெருந்தொகையை கடனாக தர முன் வந்தபோது அதனை வேண்டாம் என மறுத்து விட்டது.
மார்ச் மாத இறுதியில் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யியின் காத்மாண்டு வருகை தந்தார். இந்தியாவை தனிமைப்படுத்தி தெற்காசியாவில் பெல்ட்ரோடு திட்டத்தை செயல்படுத்தும் சீனா இதற்காக நேபாளத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
சீனாவிடம் இருந்து மானியங்களை மட்டுமே தங்கள் நாடு ஏற்க முடியும் என்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான கடன்களை ஏற்க வாய்ப்பில்லை என்றும் சீன அமைச்சர் வாங்கிடம் நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா கூறினார். , வாங் காத்மாண்டு பயணத்தின்போது மிகவும் பிரபலமான பெல்ட் ரோடு முன்முயற்சியில் முக்கிய ஒப்பந்தம் செய்ய சீனா திட்டமிட்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படவில்லை.
இதன் பிறகு இந்தியா வந்த நேபாள பிரதமர் ஷெர் பகதூர் தேவ்பா இரண்டு ஒப்பந்தங்களை செய்துள்ளார். இந்த ஒப்பந்தங்கள் இருநாட்டு மக்களின் உணவு பரிவர்த்தனை மற்றும் போக்குவரத்து தொடர்பானவை ஆகும். நேபாளம் மட்டுமின்றி மாலத்தீவு, வங்கதேசம் போன்ற நாடுகளும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சீனாவிடம் கடன் வாங்குவதை தவிர்க்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது.(இந்து)