மக்களின் பங்களிப்புடன் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும், போராட்டத்தில் ஈடுபட்ட இரு குழுக்களை பாதுகாப்பு தரப்பினர் அடையாளம் கண்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒரு குழு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்து வரும் நிலையில், ஏனைய குழுவினர் பொதுச் சொத்துகளுக்கு சேதம் விளைவித்து மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி வருவதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், இவ்வாறான நாசகார செயற்பாடுகளுக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுமெனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.