மாவட்ட விலை நிர்ணயக் கூட்டம்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்தில் கொண்டு அரசாங்கத்தினால் புதிய சுற்றுநிரூபம் வெளியிட்டப்பட்டுள்ளது.
இவற்றை தெளிவூட்டும் கலந்துரையாடல் நேற்று (05) மாவட்ட செயலக பண்டார வன்னியன் மாநாட்டு மண்டபத்தில் மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பொருளாதார விலையேற்றத்திற்கு ஏற்ப தற்போது செயற்படுத்தப்படும் வேலைத்திட்டங்களுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட விலைகளில் இருந்து பொருட்கள் தேவைப்பாடுகளுக்கு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிரூபத்தினைக் கருத்தில் கொண்டு மாதம் மாதம் விலை நிர்ணயக் கூட்டம் நடைபெறுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கலந்துரையாடலில் தொழிலாளர் கூலி, வாகன வாடகை, கட்டட மூலப்பொருட்கள் தொடர்பான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட பொறியியலாளர், உலக உணவுத்திட்டத்தின் மாவட்டப் பணிப்பாளர், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர், பிரதேச செயலகங்களின் உதவிப் பிரதேச செயலாளர்கள், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், மாவட்ட நுகர்வோர் அதிகாரசபையின் அதிகாரிகள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், பதிவு செய்யப்பட்ட ஒப்பந்தகாரர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.