உள்நாடுபிராந்தியம்
மோட்டார் போக்குவரத்து திணைக்கள நடமாடும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்
மாகாண மற்றும் மத்திய மோட்டார் போக்குவரத்து திணைக்களங்கள் இணைந்து நடாத்தும் நடமாடும் சேவை காலம் மாற்றம் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் 09ம் மற்றும் 10ம் திகதிகளில் வடக்கு மாகாண சபை வளாகம், கைதடியில் காலை 09.00மணி தொடக்கம் மாலை 03.00மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் தவிர்க்கமுடியாத காரணத்தினால் குறித்த நடமாடும் சேவையானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வட மாகாண மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் சி.சுஜீவா அவர்கள் அறியத்தந்துள்ளார்.
நடமாடும் சேவை தொடர்பான விடயங்கள் எதிர்வரும் காலங்களில் அறியத் தரப்படுமென தெரிவித்துள்ளார்