crossorigin="anonymous">
உள்நாடுபிராந்தியம்

தீயணைப்பு கருவிகள் பயன்படுத்தும் செயலமர்வு

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் கட்டடத் தொகுதியில் பொருத்தப்பட்டுள்ள தீயணைப்பு கருவிகளினை அனர்த்த காலங்களில் உடனடியாக களத்தில் எல்லோரும் பயன்படுத்துதல் மற்றும்  கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பாக செயன்முறை ரீதியாக விழிப்புணர்வூட்டும் செயற்திட்டம் மாவட்ட செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

மாவட்டத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தங்கள் பற்றியும் அதனை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட உடனடி நடவடிக்கைகள் தொடர்பாகவும் அத்தோடு தீயணைப்பு கருவிகளின் பயன்பாடுகள் தொடர்பிலும் தெளிவூட்டும் வகையில் சகல விடயங்களையும் உள்ளடக்கியதாக தயாரிக்கப்பட்ட முன்மொழிவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளரினால் உத்தியோகத்தர்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டது.

மாவட்டச்செயலக வளாகத்தில் தீயணைப்பு கொள்கலன்களை கையாளுகின்ற முறைமை தொடர்பாக செயன்முறை ரீதியாக விளக்கமளிக்கப்பட்டு உத்தியோகத்தர்களும் கைளாளுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்பட்டு தெளிவூட்டப்பட்டது.

இச் செயன்முறை நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்,பதவிநிலை உத்தியோகத்தர்கள், கிளைக் தலைவர்கள், உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Enter Answer 5 + 3 =

Back to top button
error: