தற்போதைய நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்கான வழிகளில் ஒன்று இலங்கை மத்திய வங்கியை சுதந்திரமாகச் செயல்பட அனுமதிப்பதாகும் என மத்திய வங்கியின் புதிய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
தாம் எதையும் மறைக்கப் போவதில்லை என்றும், சுதந்திரமாகச் செயற்படுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் ஆளுநராக பதிவை பொறுப்பேற்றதன் பின்னர் முதன்முறையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
நாட்டின் நிதி அமைப்பில் நிலவும் ஏற்றத்தாழ்வை ஈடுசெய்யும் வகையில் கொள்கை வட்டி வீதங்களை அதிகரிக்க இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தீர்மானித்துள்ளதாக கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.
அதன்படி, கொள்கை வட்டி வீதம் 7% ஆல் அதிகரிக்கும்.
இலங்கையில் வட்டி விகிதங்கள் இவ்வளவு அதிக அளவில் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை என்று அவர் தெரிவித்தார்.
எதிர்பார்த்தபடி கடன் மறுசீரமைப்பு செய்யப்படவில்லை என்றும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.