ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையிலான நேற்றைய சந்திப்பு இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளது.
காபந்து அரசாங்கத்தை ஸ்தாபிப்பதன் அவசியப்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக குறித்த சந்திப்பு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரகட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான அநுர பிரியதர்ஷன யாப்பா, தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, கடந்த 8ஆம் திகதி முன்வைக்கப்பட்ட, காபந்து அரசாங்கத்தை ஸ்தாபித்தல் உள்ளிட்ட 11 யோசனைகள் குறித்து ஆராயப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், புதிய பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பில் எவ்வித இணக்கப்பாடுகளும் ஏற்படவில்லை என குறிப்பிடப்படுகிறது.
இந்த விடயம் தொடர்பில், கருத்துரைத்த, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எதிர்வரும் காலப்பகுதியிலும் இது குறித்து ஆராயவுள்ளதாக தெரிவித்தார்.