அனுமதிப்பத்திரமின்றி எரிபொருள் விற்பனை செய்தால் நடவடிக்கை – பொலிஸ்
எரிபொருள் நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொண்டு அனுமதிப்பத்திரமின்றி அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை கைதுசெய்வதற்கான சுற்றிவளைப்புக்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதுவரை முன்னெடுக்கப்பட்ட 68 சுற்றிவளைப்புக்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 8025 லீற்றர் பெற்றோல் மற்றும் 726 லீற்றர் டீசல் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை வத்தளை பிரதேசத்தில் அனுமதிபத்திரமின்றி அதிக விலைக்கு எரிபொருள் விற்பனை செய்த நபரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வத்தளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட ஹெந்தலவத்தை பிரதேசத்தில் குறித்தநபர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேப்பகுதியைச் சேர்ந்த 71 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார், குறித்தநபரிடமிருந்து 30லீற்றர் 750 மில்லிலீற்றர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணைகளை வத்தளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.