பல்வேறு பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வரும் இவ்வேளையில் முஸ்லிம்கள் மகத்தான ரமழான் மாதத்தின் நடுப்பகுதியை அடைந்துள்ள நிலையில் அதிகமாக நல்லமல்கள் செய்து இஸ்திஃபார், தவ்பாவின் மூலம் அல்லாஹ்வுடனான நெருக்கத்தை அதிகரித்துக் கொள்ள வேண்டிய இச்சந்தர்ப்பத்தில், எதிர்வரும் விடுமுறைத் தினங்களை முன்னிட்டு வீண் பிரயாணங்களை மேற்கொள்வதையோ, களியாட்டங்களில் ஈடுபடுவதையோ தவிர்ந்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை சகல முஸ்லிம்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பதில் பொதுச் செயலாளர் அஷ்ஷைக் எம்.எஸ்.எம் தாஸீம் மௌலவி அவர்கள் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த நெருக்கடியான இச்சூழ்நிலையில் நாட்டுப் பிரஜைகள் அனைவருக்கும் இன, மத பேதமின்றி நன்மையான விடயங்களில் ஒத்துழைப்பு நல்குமாறும், கஸ்டத்துடன் வாழும் சகோதர, சகோதரிகளுக்கு உதவி ஒத்தாசை செய்யுமாறும் சகல முஸ்லிம்களையும் வேண்டிக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.